சீன கடற்படைக்கு சொந்தமான "ஷு கே ஷென்" கப்பல் இலங்கை வருகை
சீன கடற்படைக்குச் சொந்தமான "ஷு கே ஷென்" எனும் கடற்படை கப்பல் அதிகாரப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (2019 நவம்பர் 14) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
கப்பல் துறைமுகத்துக்கு வந்தடைந்த பின் சீன கடறபடையின் கடல் ஆய்வு பிரிவு துணைத் தளபதி, மூத்த கேப்டன் ஜான் போரன் மற்றும் கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்தார்கள். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இந் நிகழ்வுக்காக சீனாவின் போர், வான் மற்றும் கடற்படை விவகாரங்களுக்கான பாதுகாப்பு ஆலோசகரின் மூத்த கேர்ணல் சூ ஜியான்வே மற்றும் கப்பலின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
129 மீட்டர் நீளமான "ஷு கே ஷென்" கப்பலில் 150 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. ஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொன்டு வருகைதந்த இக் கப்பலின் கடற்படையினர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதன் படி விஜயத்தின் பின் 2019 நவம்பர் 19 ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை விட்டு புறப்பட உள்ளது.
|