முதன்முறையாக, இலங்கை கடற்படை 50 கடல் மைல் தூரத்தில் கூட்டு கடற்படை பயிற்சியை விமானப்படையுடன் மேற்கொண்டது
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து கப்பலுக்கு ஹெலிகாப்டர் மற்றும் போலி மனிதன் (Dummy man) தரையிறக்கும் பயிற்சியொன்று 2019 நவம்பர் 13, அன்று பானதுறை கடல் பகுதியில் மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, இலங்கை கடற்படையின் சிந்துரல கப்பலுக்கு விமானப்படையின் பெல் 412 ஹெலிகாப்டர் தரையிறக்கும் மூன்று பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் சிந்துரல கப்பல் கடற்கரையிலிருந்து 50 கடல் மைல் தொலைவில் இலங்கை விமானப்படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டருடன் ஒரு நபரை கப்பலில் தரையிறக்கும் பயிற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த பயிற்சியின் போது ஒரு மனிதனுக்கு பதிலாக ஒரு போலி மனிதன் பயன்படுத்தியது, அங்கு கப்பலின் குழுவினரும் விமானிகளும் இதுபோன்ற மூன்று பயிற்சிகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
மேலும், 50 கடல் மைல் தூரத்தில் ஹெலிகாப்டர் மூலம் கப்பலின் ஒரு நபரின் படத்தை தரையிறக்கும் பயிற்சியை இலங்கை கடற்படை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
குறித்த கடற்படை மற்றும் விமானப் படையின் கூட்டுப் பயிற்சியை நடத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல மூலம் வழங்கப்பட்டன இந் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க மற்றும் கடற்படை செயல்பாடுகளின் கடற்படை பணிப்பாளர், கொமடோர் சஞ்சிவ டயஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|