கடற்படை நடவடிக்கையின் போது 65 கிலோகிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டது

2019 நவம்பர் 11, அன்று, மண்டைதீவுக்கு வடகிழக்கில் களப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 65.35 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை கைப்பற்றியது.

மண்டைதீவுக்கு வடகிழக்கில் களப்பு பகுதியில் வடக்கு கடற்படை கட்டளை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது நீரில் மூழ்கிய சந்தேகத்திற்கிடமான ஒரு பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது. அதை சோதனையிட்டபோது, பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாக கடற்படை ஏராளமான பீடி இலைகள் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.