அங்கீகரிக்கப்படாத குடியேறியவர்கள் பதினொரு பேர் (11) கடற்படையால் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற பதினொரு (11) இலங்கையர்கள் இன்று (நவம்பர் 06) காலையில் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, கடற்படை மற்றும் சிலபாம் பொலிஸார் இனைந்து சிலபாம் கடல் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சில சந்தேகத்திற்கிடமான நபர்கள் காணப்பட்டனர்.அங்கு மேலும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடு செல்ல தயாராக இருந்த 11 நபர்களை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் இலங்கையிலிருந்து பிரான்ஸ் லா ரீயூனியனுக்கு குடிபெயர தயாராகி உள்ளதாக நம்பப்படுகிறது. அவர்கள் ஒரு சிறிய டிரக் வண்டியில் வந்து படகுகள் மூலம் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 25 முதல் 57 வயது வரையிலான சிலாபம் பகுதியில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டனர். சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவ்வாரு கடற்படை மூலம் நடத்திய பரிசோதனையின் விளைவாக சட்டவிரோத குடியேறியவர்கள் மற்றும் கடத்தல்காரர்களின் எண்ணிக்கையை குறைக்க கடற்படையால் முடிந்தது.