வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுளை புனரமைக்க கடற்படை உதவி

தனமல்வில வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலற்றதுடன் 2019 நவம்பர் 04 ஆம் திகதி கடற்படையால் இது சரிசெய்யப்பட்டன.

அதன் படி குறித்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் தூக்கும் பொறிமுறையில் தொழில்நுட்ப பிழை காரணமாக ஒரு வான் கதவு தூக்க முடியாது என்று நீர்ப்பாசனத் துறை கடற்படை தலைமையகத்திற்கு அறிவித்திருந்தது.

அதன் படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், தெற்கு கடற்படைக் கட்டளையின் ஒரு குழு அந்த இடத்திற்கு அனுப்பி வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவில் பூட்டப்பட்டிருந்த கேபிளின் பாகங்களை அகற்றி செயலற்ற நிலையில் இருந்த வான் கதவுளை புனரமைக்கப்பட்டுள்ளது.