இலங்கையின் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயம்
இலங்கையின் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டினேஷ் ஐ ஸ்கோடா (Denis I. Shkoda) 2019 நவம்பர் 4 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.
அதன்படி, இலங்கையில் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டினேஷ் ஐ ஸ்கோடா அவர்களும் இலங்கையில் ரஷ்ய துணை பாதுகாப்பு ஆலோசகரும் தெற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி அனுர தனபால அன்புடன் வரவேற்றார். மேலும் துணைத் தளபதி ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் பங்கு குறித்து ரஷ்ய பாதுகாப்பு பிரதிநிதிகளுக்கு விளக்கினார்.
இந்நிகழ்வுக்காக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக வசதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரி (PFSO) உட்பட தெற்கு கடற்படை கட்டளையின் மூத்த கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.