தங்காலை பழைய சிறைச்சாலை கட்டிடம் கடற்படைக்கு ஒப்படைக்கப்படும்
தங்காலை பழைய சிறைச்சாலை , 2019 அக்டோபர் 30 ஆம் திகதி கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி, டச்சு ஆட்சியின் போது கட்டப்பட்டட தங்காலை கோட்டையில் உள்ள இந்த சிறைச்சாலை கட்டிடத்தை கடற்படையிடம் பரிமாற்றக் கடிதம் தங்காலை பிரதேச செயலாளர் திருமதி கௌஷல்யா கலப்பத்தி அவர்களினால் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போளிடம் ஒப்படைக்கப்பட்டது.
1775 ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. சிறைச்சாலை 2017 வரை மாறாமல் இருந்தது, தங்காலை சிறைச்சாலை 2017 நவம்பர் 03 ஆம் திகதி அங்குனுகோலபெலெச்சவுக்கு மாற்றப்பட்டது.p>
கட்டிடம் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்ட பின்னர் இது தங்காலையில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ருஹுனு நிருவனத்தின் கீழ் , கடற்படை அதன் பண்டைய மதிப்பைப் பாதுகாக்கும் படி பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.