கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்
இந்த நாட்களில் பெய்யும் மழையால் எதிர்கால அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண குழுக்களை நிறுவ இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தெற்கு மாகாணத்தில் தவலம மற்றும் நெலுவ பகுதிகளில் கடற்படை நிவாரண குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுக்காக கடற்படையின் விரைவான பதில் மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU) மற்றும் கடற்படை சுழியோடி பிரிவின் நிவாரண குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது தவிர, கடந்த சில நாட்களில் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் சேர்ந்து தண்ணீர் ஓட்டம் தடுக்கபட்ட பல பாலங்கள், கால்வாய்கள் மற்றும் கல்வெட்டுகளை சுத்தம் செய்யப்பட்டது
இந்த திட்டத்தின் மற்றொரு திட்டம் இன்று (2019 அக்டோபர் 28,) காலி தொடங்கொட பாலத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆற்றின் கரையில் வாழும் மக்களுக்கு எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுப்பதற்காக தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு சுழியோடி குழு கழிவுகளை விரைவாக அகற்றவும், தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் நாட்டின் ஏற்படும் எந்த பேரழிவு சூழ்நிலையிலும் மக்களுக்கு உதவி வழங்க கடற்படை தயாராக உள்ளது.
|