சுழியோடி தொழிலில் பணிபுரியும் சுழியோடிகளுக்காக தொழில்நுட்ப மற்றும் சுழியோடி மருத்துவம் குறித்த ஆலோசனை பட்டறை கொழும்பில்
மேற்கு மாகாணத்தில் சுழியோடி நிபுணர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் சுழியோடி மருத்துவம் குறித்த ஆலோசனை பட்டறை இன்று (2019 அக்டோபர் 28,) தேஹிவலையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக, முப்படை மருத்துவ வல்லுநர்கள் சங்கத் தலைவர் மற்றும் கடற்படை பணிப்பாளர் நாயகம் சுகாதார சேவைகள் ரியர் அட்மிரல் சேனரூப ஜயவர்தன பங்கேற்றார்.
அதன் படி, இலங்கையில் சுழியோடி தொழிலில் நிபுணத்துவம் வாய்ந்த முன்னோடி நிறுவனமான இலங்கை கடற்படையின் சுழியோடி பிரிவு மற்றும் சுழியோடி மருத்துவம் ஆலோசகர்களைக் கொண்ட கடற்படை மருத்துவக் கிளை ஆகியவை இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியுடன் கைகோர்த்து குறித்த ஆலோசனை பட்டறை நடத்துகின்றன. இதுக்காக மேற்கு மாகாணத்தில் வசிக்கின்ற 150 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சுழியோடி தொழிலில் ஈடுபடும் போது ஏற்படுகின்ற பல்வேறுபட்ட நோய்களுக்காக முதலுதவி வழங்க வேன்டிய முறைகள் மற்றும் நிலையான சிகிச்சை முறைகள், சுழியோடி தொடர்பான நோய்களைத் தடுப்பது மற்றும் சுழியோடியின் போது உடல், மன மற்றும் உடல் தகுதி குறித்த தத்துவார்த்த மற்றும் நடைமுறை ஆலோசனைகளை இங்கு இலங்கை கடற்படையின் சுழியோடி பிரிவு மற்றும் சுழியோடி மருத்துவம் மூலம் வழங்கப்பட்டன. சுழியோடிகள் இதுக்காக ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
|