1268 கிலோ கிராம் பீடியிலை கொண்டு சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது
சட்டவிரோதமாக பீடியிலை கடத்தி சென்ற ஒருவரை 2019 அக்டோபர் 24 ஆம் திகதி நீர் கொழும்பு கல்கந்த சந்தியில் வைத்து கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளை மூலம் நீர் கொழும்பு கல்கந்த பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கல்கந்த சந்தியில் உள்ள சாலைத் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான லாரி ஒன்று சோதிக்கேப்பட்டது அங்கு 39 பொதிகளாக நிரம்பிய 1268.00 கிலோ பீடி இலைகள் கைது செய்யப்பட்டன. அவை நீர் கொழும்பிலிருந்து மினுவன்கொடைக்கு லாரி மூலம் கொண்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டன. சந்தேக நபர் 41 வயதுடைய தங்கொடுவை பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள், பீடியிலை மற்றும் லாரி வன்டி மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு சுங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளன. மேலும், இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.