பொல்கஸ்தூவ ஆரண்யத்தில் வருடாந்திர கட்டின பூஜைக்கு கடற்படை ஆதரவு
காலி, ரத்கம போல்கஸ்தூவ ஆரண்யத்தில் வருடாந்திர கட்டின பூஜை விழா, இந்த முறையும் ஏராளமான புத்த பக்தர்களின் பங்களிப்புடன் 2019 அக்டோபர் 23 திகதி நடைபெற்றது. இதுக்காக தென் கிழக்கு கடற்படை கட்டளை தனது பங்களிப்பு வழங்கியது
பொல்கஸ்தூவ ஆரண்யத்தில் கட்டின பூஜை விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் ரத்கம களப்பு வழியாக ஆரண்யத்துக்கு பயணம் செய்வது கடினமானது இதுக்கு ஒரு தீர்வாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் பேரில் தெற்கு கடற்படைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவில் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மற்றும் மரையின் பிரிவின் கடற்படையினர் மூன்று சிறிய படகுகள் பயன்படுத்தி களப்பு வழியாக ஆரண்யத்துக்கு செல்ல பயண வசதிகள் வழங்கப்பட்டன.
கடற்படை 1700 அதிகமான மக்களுக்கு களப்பு ஊடாக பயணம் செய்ய தேவையான வசதிகள் வழங்கியது. இலங்கை கடற்படால் மேற்கொள்ளப்பட்ட இந்த செயல்பாடுக்காக ஆரண்ய மதிப்பிற்குரிய துறவிகளின் மற்றும் பக்தர்களின் பாராட்டு வழங்கப்பட்டன
|