இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இனைந்து சிந்துரல கப்பலில் கூட்டுப் பயிற்சி நடவடிக்கை யொன்று மேற்கொண்டுள்ளனர்
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து கப்பலில் ஹெலிகாப்டரை தரையிறக்கும் பயிற்சி யொன்று 2019 அக்டோபர் 20, அன்று திருகோணமலை துறைமுகத்தில் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை கடற்படைக்கு சொந்தமான ‘சிந்துரல’ கப்பலுக்கு இலங்கை விமானப்படையின் பெல் 412 ஹெலிகாப்டர் தரையிறக்கும் பயிற்சி திருகோணமலை துறைமுகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. கப்பல் கடலில் நகரும் போது ஹெலிகாப்டரை தரையிறக்க கப்பலின் கட்டளை அதிகாரி, கேப்டன் (ஆயுத) சின்தக குமாரசிங்க மற்றும் பிற குழு உறுப்பினர்கள் உதவினர்.
மேலும், இந்த வரலாற்று வாய்ப்பு எதிர்கால கடற்படை விமான நடவடிக்கைகளுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கும்.
இந்த கூட்டுப் பயிற்சியில் கடற்படை சுழியோடிபிரிவு மற்றும் கடற்படையின் உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU) இணைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டார்.
|