அடையாளத்தை நிரூபிக்க முடியாத ஐந்து பேர் கடற்படையால் கைது
இன்று (அக்டோபர் 23) காலை ஜா-எல பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அடையாளத்தை நிரூபிக்க முடியாத 5 பேரை கடற்படையால் கைது செய்யப்பட்டது.
அதன்படி, ஜா-எல நகராட்சி மன்றத்திற்கு அருகிலுள்ள சாலைத் தடையில் வைத்து சந்தேகத்திற்கிடமான ஒரு வேனை கடற்படை சோதித்துள்ளது . மேலும் குறித்த வேனை சோதிக்கும் போது அடையாளத்தை நிரூபிக்க முடியாத இந்த நபர்களை கைது செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இந்தியர்கள் மற்றும் இரண்டு தமிழர்கள் உள்ளனர். இரண்டு தமிழர்கள் யதியந்தோட்டை மற்றும் மாதலையில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் மற்றும் வேன் வண்டி ஜா-எல போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது