2019 காலி கலந்துரையாடலில் கழந்துகொன்ட மேலும் பல வெளிநாட்டு பாதுகாப்புத் தலைவர்கள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கொழும்பு, காலி முகத் ஹோட்டலில் தொடங்கிய காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த வெளிநாட்டு பாதுகாப்புத் தலைவர்களின் மேலும் பல நபர்கள் 2019 அக்டோபர் 22 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை சந்தித்தனர்.

அதன் பிரகாரமாக ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, ஜெர்மனி, பாகிஸ்தான், போலந்து, கம்போடியா, மலேசியா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சி உதவியாளர் கலாநிதி டேவிட் ப்ரெவுஸ்டர் அவர்கள் கடற்படைத் தளபதியை சந்தித்தைனர். அங்கு அவர்கள் பாதுகாப்புப் படைகள் இடையே இருதரப்பு நட்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடினார்கள்.

இதுபோன்ற சர்வதேச கடல் மாநாட்டை ஏற்பாடு செய்வதன் மூலம் நாடுகளுக்கிடையேயான நட்பை மேம்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியது பற்றி அவர்கள் கடற்படைத் தளபதியவர்களுக்கு தமது நன்றியை வெளிப்படுத்தியவுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.


கடற்படைத் தளபதியுடன் ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சி உதவியாளர் சந்திப்பு


கடற்படைத் தளபதியுடன் ஜப்பான் கடல்சார் பணியாளர்கள் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் மற்றும் திட்டமிடுதல் துறை சந்திப்பு


கடற்படைத் தளபதியுடன் ரஷ்ய கடற்படையின் தலைமை பணியாளர் சந்திப்பு


கடற்படைத் தளபதியுடன் ஜெர்மன் கடற்படை இயக்குனர் (திட்டமிடல் மற்றும் கொள்கை)சந்திப்பு


கடற்படைத் தளபதியுடன் பாகிஸ்தான் கடற்படையின் துணைத் தலைவர் சந்திப்பு


கடற்படைத் தளபதியுடன் ஆஸ்திரேலிய கடற்படையின் கடல் எல்லைக் கட்டளைத் தளபதி சந்திப்பு


கடற்படைத் தளபதியுடன் இந்தியாவின் போலந்து பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு


கடற்படைத் தளபதியுடன் ராயல் கம்போடிய கடற்படையின் தலைவர் சந்திப்பு


கடற்படைத் தளபதியுடன் மலேசிய கடற்படையின் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி சந்திப்பு


கடற்படைத் தளபதியுடன் சீஷெல்ஸ் கடலோர காவல்படையின் தளபதி சந்திப்பு


கடற்படைத் தளபதியுடன் இந்திய கடலோர காவல்படைத் தலைவர் சந்திப்பு