புதிய சிந்தனையுடன் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுதல்: தசாப்தத்தின் மறு ஆய்வுடன் 2019 காலி கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு
பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை மூலம் தொடர்ந்து பத்தாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு 2019 ஒக்டொபர் 22 ஆம் திகதி கொழும்பு காலி முகத் ஹோட்டலில் நிறைவடிந்தது. புதிய சிந்தனையுடன் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுதல்: தசாப்தத்தின் மறு ஆய்வு என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில் 55 நாடுகளில் பிரதிநிதிகள், 12 சர்வதேச நிறுவனங்களிள் பிரதிநிதிகள் மற்றும் 03 பாதுகாப்பு துறை பொருட்கள் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
கடற்படை அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்கின்ற காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு, பிராந்திய கடல்சார் பங்காளித்துவம் மற்றும் உலக மட்டத்தில் பொதுவான கடல்சார் சவால்களுக்கான தீர்வுகள் பரிமாறிக்கொள்வது பிரதான நோக்கமாக கொண்டு நடைபெறுகின்றது. உலக கடல்சார் இணைப்புகளை வலுப்படுத்தும் மிக முக்கியமான காரனங்கள் பற்றி கலந்துரையாட இந்த ஆண்டு மாநாடு சாத்தியமானது.
மேலும், பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற காலி உரையாடல்களில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த ஆண்டு மாநாட்டிற்கு கலந்து கொண்டனர். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த மாநாடுக்காக 55 நாடுகளில் பிரதிநிதிகளின் பங்கேற்பு நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
அதன்படி, இந்த ஆண்டு கருத்தரங்கில் “புதிய சிந்தனையுடன் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுதல்: தசாப்தத்தின் மறு ஆய்வு” என்ற தொனிப் பொருள் முன்வைத்து வெளிநாட்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்பு பிரதிநிதிகள் தங்களுடைய ஆய்வறிக்கையை முன்வைத்தனர்.
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்புக்கு இந்திய கடற்படையின் அர்ப்பணிப்பு சர்வதேச குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக இந்தியப் பெருங்கடலில் கடந்த 10 ஆண்டுகால கடமைகளின் கண்ணோட்டம்., இந்திய கடற்படையின் தலைமை பணியாளர். வைஸ் அட்மிரல் எம்.எஸ். பவர்
பகிரப்பட்ட எதிர்காலத்தின் மூலம் கடல்சார் சமூகத்தின் கருத்தை உறுதிப்படுத்தல், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறப்பு. சீன கடற்படையின் துணைத் தலைவரான ரியர் அட்மிரல் ஹு ஷொந்ங்மிங்,
கடல்சார் பாதுகாப்பை பராமரிப்பதில் கடற்படையின் பங்கு ரஷ்ய கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் ஒலெக் வி. அபிஷேவு
சிறந்த பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான கடல் ஒத்துழைப்பை உருவாக்குதல்; கடந்த 10 ஆண்டுகால பற்றி கண்ணோட்டம் அமெரிக்காவின் பசிபிக் கடற்படை செயல்பாட்டு மையத்திற்கான கூடுதல் பாதுகாப்பு இயக்குனர் ரியர் அட்மிரல் டப் க்ரன்ட் மேகர்
"இந்திய பெருங்கடலில் மூலோபாய சுற்றுச்சூழல் முன்னேற்றங்கள்: பல துருவ மண்டலத்துக்காக திட்டமிடல் 'மூத்த ஆராய்ச்சி உதவியாளர் ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம், கலாநிதி திரு டேவிட் ப்ரூஸ்டர்
"இந்தியப் பெருங்கடலில் கடற்படை பொருளாதாரம்: கப்பல் சார்ந்த பொருளாதாரங்களின் தேவைகளைப் பாதுகாக்க இந்தியப் பெருங்கடலில் ஜப்பானிய வழிசெலுத்தல் பற்றி பகுப்பாய்வு ஜப்பான் கடல்சார் தற்காப்பு படை கடல் பணியாளர்கள் அலுவலகம், இயக்குநர் பொது செயல்பாடுகள் மற்றும் திட்டமிடல் துறை அதிகாரி, ரியர் அட்மிரல் அகிரா சைட்டோ
"பிராந்தியத்தில் மற்றும் இலங்கை துறைமுகங்கள் மற்றும் அவர்களின் போட்டி இலங்கை துறைமுக அதிகார சபையின் நிர்வாக இயக்குனர், கேப்டன் அத்துல ஹேவாவிதாரன
"இந்திய பெருங்கடலில் கடற்படை பொருளாதாரம்: இலங்கையின் பங்கு இலங்கை கப்பல்கள் முகவர்கள் சங்கத்தின் தளபதி இக்ரம் கடீலென் அவர்கள்
இந்தியப் பெருங்கடல்: பாரம்பரியமற்ற இயற்கையின் சர்வதேச கடல்சார் அச்சுறுத்தல்களின் போக்குகள் மற்றும் பரிணாமம் பற்றிய ஒரு கண்ணோட்டம் - தேசிய கடல்சார் இணைப்புகளுக்கான ஒற்றை கூட்டாளியின் தேவை, மலேசியாவின் கடல்சார் நிறுவனம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர மையங்களின் மூத்த உறுப்பினர் / மையத் தலைவர். கேப்டன் மார்ட்டின் ஏ. செபஸ்டியன்
இந்தியப் பெருங்கடலில் பாரம்பரியமற்ற கடல் அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிப்பு; பிரெஞ்சு கடற்படையின் பத்து வருட அனுபவத்தின் கண்ணோட்டம் பிரெஞ்சு இராணுவத்தின் இந்தியப் பெருங்கடல் இணைத் தளபதி, ரியர் அட்மிரல் டிடியர் மாலேத்ரே,
இந்தியப் பெருங்கடலில் பாரம்பரியமற்ற கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது; கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்தின் கண்ணோட்டம் ஐக்கிய நாடுகளின் மருந்து மற்றும் குற்றவியல் நிறுவனம் உலகளாவிய கடல் திட்ட ஒருங்கிணைப்பாளர் (தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக்),ஷானக ஜயசேகர
இந்தியப் பெருங்கடலில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்: கடந்த தசாப்தத்தில் பங்களாதேஷின் உறுதிப்பாட்டில் கடல் சூழலின் தாக்கம் குறித்த பகுப்பாய்வு. பங்களாதேஷ் கடற்படையின் சித்தகாங் கடற்படை கட்டளையின் தளபதி, ரியர் அட்மிரல், அபு அஷ்ரப்
இந்தியப் பெருங்கடலின் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்; கடந்த பத்தாண்டுகளாக மாலத்தீவின் தேசிய காவலரின் உறுதிப்பாட்டில் கடல் சூழலின் தாக்கம் குறித்த பகுப்பாய்வு. மாலத்தீவு தேசிய காவல்படையின் கடலோர தளபதி கர்னல் முகமது சலீம்
கடல்சார் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு பதில்களைக் கண்டறிதல்; கடந்த 10 ஆண்டுகளில் ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் பங்கு மற்றும் அர்ப்பணிப்பு ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் கடல் எல்லைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் லீ கோடார்ட்
"கடல் பேரழிவுகள் மற்றும் இணைந்து மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு பதில் நடவடிக்கைகளை திட்டம் – இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் பாக்கிஸ்தான் கடற்படையின் பங்கு, ஒரு கண்ணோட்டம்," பாக்கிஸ்தான் கடற்படையின் துணைத் தலைமை பணியாளர், ரியர் அட்மிரல் முகமது ஷுஐபை
"கடல்சார் அனர்த்த மற்றும் கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு பதில் நடவடிக்கைகளை திட்டம் கடந்த தசாப்தத்தில் இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு பதில் கடமைகள் இந்தோனேஷிய கடற்படை, திட்டமிடல்" இந்தோனேஷிய கடற்படை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் துணை தளபதி அட்மிரல் டெடிட் எக்கோ விட்ஜேக்சோனோ
கொழும்பு துறைமுக கரைக்கு அருகிலுல்ல கடலில் 'டேனியலா' வணிக கப்பலின் தீ பற்றிய ஆய்வு இலங்கை கடற்படை இயக்குநர் பொது பணியாளர்கள் ரியர் அட்மிரல் முதித கமகே
காலி உரையாடல் கருத்தரங்கின் கடைசி நாளில் இயக்குநர் பொது செயல்பாடுகள் மற்றும் துணைத் தலைமைத் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல நன்றி கதை சமர்ப்பித்தார். அங்கு மாநாட்டை நடத்த வாய்ப்பளித்ததற்காக இலங்கை கடற்படை சார்பில், இலங்கை கடற்படை பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தூதர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. மேலிம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஊக்குவித்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள், அமைப்புகள் மற்றும் அமைப்புகளின் அறிஞர்களுக்கு நன்றி தெரிவிக்க ரியர் அட்மிரல் ஆட்டிகல இது வாய்ப்பாக கொண்டுள்ளார். அதன்படி, இரண்டு நாட்கள் நீடித்த காலி உரையாடல் 2019 சர்வதேச பெருங்கடல் மாநாடு வெற்றிகரமாக நிறைவடிந்தது.