சட்டவிரோதமாக பிடித்த 340 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் 11 நபர்கள் கடற்படையினரால் கைது

கடற்படையால் திருகோணமலை, நல்லூர் கடற்கரையில் மற்றும் மன்னார், வன்காலே பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் சட்டவிரோதமாக பிடித்த 340 கிலோ கிராம் கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம் 2019 அக்டோபர் 21 அன்று திருகோணமலை நல்லூர் கடற்கரையில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். குறித்த நபர்கள் 23 முதல் 41 வயதுக்குட்பட்ட நிலவேலி பகுதியில் வசிப்பவர்களாக அடையாளம் காணப்பட்டனர். அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட 03 டிங்கி படகுகள், 03 வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள், சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 300 கிலோ கிராம் கடல் அட்டைகள், 02 கிலோ கிராம் சிங்கிறால் மற்றும் 03 கிலோ கிராம் மீன்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், மீன்பிடிப் படகுகள், வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள், கடல் அட்டைகள், சிங்கிறால்கள், மீன் பொதிகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களை மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், மன்னார் வன்காலே கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகிலுள்ள வட மத்திய கடற்படை கட்டளையின் சாலைத் தடையில் வைத்து சந்தேகனமான முச்சக்கர வண்டி யொன்று சோதிக்கும் போது அதுக்குள்ளே 40 கிலோகிராம் கடல் அட்டைகள் கடற்படை கண்டறிந்து. இந்த கடல் அட்டைகள் கொண்டு செல்ல செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இவரிடம் இல்லாத காரணத்தினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டது.

சந்தேகநபர் மன்னார் நானட்டான் பகுதியில் வசிக்கும் 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கடல் அட்டைகள் பொதி மற்றும் முச்சக்கர வண்டி மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் உதவி மீன்வள இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.