கடற்படை தளபதி மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புத் தலைவர்கள் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்கியது
கொழும்பு, காலி முகத் ஹோட்டலில் தொடங்கிய காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த வெளிநாட்டு பாதுகாப்புத் தலைவர்களின் பல பேர் 2019 அக்டோபர் 21 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை சந்தித்தனர்.
அதன் பிரகாரமாக கனடா, சீனா, இங்கிலாந்து, இந்தியா, மாலத்தீவு, மியான்மர், நியூசிலாந்து, சூடான், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கடற்படை தளபதியை சந்தித்து பாதுகாப்புப் படைகள் இடையே இருதரப்பு நட்பை மேம்படுத்துதல் மற்றும் கடல் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடினார்கள்.
இதுபோன்ற சர்வதேச கடல் மாநாட்டை ஏற்பாடு செய்வதன் மூலம் நாடுகளுக்கிடையேயான நட்பை மேம்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியது பற்றி அவர்கள் கடற்படைத் தளபதியவர்களுக்கு தமது நன்றியை வெளிப்படுத்தியவுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
கடற்படைத் தளபதியுடன் கனடா கடற்படையின் பசிபிக் கட்டளை தளபதி சந்திப்பு
கடற்படைத் தளபதியுடன் சீன கடற்படையின் தலைமை பணியாளர் சந்திப்பு
கடற்படைத் தளபதியுடன் இங்கிலாந்து ராயல் கடற்படை செயல்பாட்டு பயிற்சி நிர்வாகி சந்திப்பு
கடற்படைத் தளபதியுடன் இந்தியப் பெருங்கடலில் பிரெஞ்சு ஆயுதப்படைகளின் தளபதி சந்திப்பு
கடற்படைத் தளபதியுடன் இந்திய கடற்படையின் தலைமை பணியாளர் சந்திப்பு
கடற்படைத் தளபதியுடன் மாலத்தீவின் கடலோர காவல்படையின் தளபதி சந்திப்பு
கடற்படைத் தளபதியுடன் மியான்மர் கடல்சார் பயிற்சி கட்டளைத் தளபதி சந்திப்பு
கடற்படைத் தளபதியுடன் ராயல் நெதர்லாந்து கடற்படையின் துணைத் தலைவர் சந்திப்பு
கடற்படைத் தளபதியுடன் ராயல் நியூசிலாந்து கடற்படையின் தலைவர் சந்திப்பு
கடற்படைத் தளபதியுடன் சூடான் கடற்படை செயல்பாடுகள் மற்றும் பயிற்சி பிரிவின் துணைத் தலைவர் சந்திப்பு
கடற்படைத் தளபதியுடன் அமெரிக்காவின் பசிபிக் கடற்படை செயல்பாட்டு மையத்திற்கான கூடுதல் பாதுகாப்பு இயக்குனர் சந்திப்பு