சட்டவிரோதமாக குடியேற முயன்ற மூன்று நபர்கள் உட்பட மனித கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது
இலங்கை கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி கடற்படையால் மன்னார் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது சந்தேகமான படகொன்றுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாருக்கு வடக்கு பகுதியில் உள்ள கடலில் இயங்கும் ஒரு டிங்கி படகை இலங்கை கடற்படை கவனித்துள்ளது. குறித்த படகை மேலும் சோதித்த போது சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு குடிபெயர முயன்ற மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மனித கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு கடத்தல்காரர்களும் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பேசாலை மற்றும் ஊருமலை பகுதியில் வசிக்கும் 30 மற்றும் 34 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் வசிக்கும் 28, 37 மற்றும் 49 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 5 பேரும் படகு இலங்கை கடற்படை கப்பல் ‘தம்மன்னா நிறுவனத்திடம் கொண்டு வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், சந்தேகநபர்களில் ஒருவர் புதுக்குடுஇருப்பு காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் அவர் சமீபத்தில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற ரோந்து நடவடிக்கைகள் காரணத்தினால் கடல் வழியாக நடைபெறுகின்ற சட்டவிரோத இடம்பெயர்வு உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக தடுக்க முடிந்துள்ளது.
|