சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்களை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி முல்லைதீவு, அலம்பில் கடல் பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.

அதன் படி கிழக்கு கடற்படை கட்டளை மூலம் முல்லைதீவு, அலம்பில் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த சந்தேக நபர்களை செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் எனக் காரணங்களால் கைது செய்யப்பட்டது. அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய ஒரு டிங்கி, ஒரு அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலை மற்றும் ஒரு வெளிப்புற மோட்டார் ஆகியவற்றையும் கடற்படையால் கைப்பற்றியது. கைது செய்யப்பட்ட நபர்கள் புல்மோட்டை பகுதிகளில் வசிக்கின்ற 24 மற்றும் 27 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்./p>

கைது செய்யப்பட்ட நபர்கள், டிங்கி படகு, வெளிப்புற மோட்டார், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலை மற்றும் மீன்பிடி பொருட்கள் திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.