கடற்படை மேற்கொன்டுள்ள சிறப்பு சோதனையின் போது 164.3 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டன
கடற்படை இன்று (அக்டோபர் .19) காலை மன்னார் இலுபகடவாய் பகுதியில் உள்ள சாலைத் தடையில் வைத்து 164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அதன் படி இன்று அதிகாலை மன்னார் இலுபகடவாய் சாலைத் தடையில் வைத்து கடற்படையினரால் சொகுசு ஜீப் வண்டியொன்று நிறுத்த முயன்றபோது குறித்த வண்டி தப்பிச் செல்ல முயன்றது. அங்கு, தப்பிச் சென்ற ஜீப் வண்டிக்கு எச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டு விடுவித்த பின்னர் சந்தேகத்திற்கிடமான ஜீப் வண்டியை கடற்படையால் நிறுத்த முடிந்தது. குறித்த வண்டி மேலும் சோதித்த போது பல பொதிகளாக இருந்த 164.3 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டன. வாகனத்தின் ஓட்டுநர் கலுவங்கர்னி பகுதியில் வசிப்பவர் என்றும் மற்ற சந்தேக நபர் மொனராகலை, மெதகம காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட போலீஸ் அதிகாரியொருவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் சொகுசு ஜீப் வண்டி மற்றும் கேரள கஞ்சா மன்னார் போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
இந்த ஆண்டுக்குள் மட்டும் 105 சந்தர்ப்பங்களில் 3 டன் கேரளா கஞ்சாவை கடற்படை பறிமுதல் செய்துள்ளதுடன், 169 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நாட்டில் போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
|