ஏழாவது சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (CISM) விளையாட்டு போட்டி நிகழ்வில் கடற்படை குழு கலந்து கொள்கிறது
சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் (Council International Military Sports) மூலம் தொடர்ந்து ஏழாவது தடவையாக ஏற்பாடுசெய்கின்ற விளையாட்டு போட்டி நிகழ்வில் பங்கேற்க கமடோர் ஜயந்த கமகே தலைமையில் 27 கடற்படை வீரர்கள்/விளையாட்டு வீரர்கள் கொண்ட குழு இன்று (அக்டோபர் 16) காலை சீனாவில் வுவான் நோக்கி நாட்டை விட்டு வெளியேறி சென்றனர்.
அதன்படி, ஏழாவது சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் (CISM) விளையாட்டு போட்டி நிகழ்வு சீனாவின் வுவான் நகரத்தில் 2019 அக்டோபர் 29 ஆம் திகதி வரை நடைபெறும், இதில் முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 103 வீர்ர்கள் பங்கேற்கின்றனர். குறித்த அணிக்கு கமடோர் ஜெயந்த கமகே தலைமை தாங்குகிறார்.இந்த அணியில் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 52 வீரர்கள், கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் 27 வீரர்கள் மற்றும் விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 வீரர்கள் உள்ளனர்.
கூடுதலாக, சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் 1948 பிப்ரவரி 18 இல் நிறுவப்பட்டது, இப்போது 135 நாடுகளின் ஆயுதப்படைகளில் உறுப்பினராகிவிட்டது. இலங்கை 1996 இல் உறுப்பினர் தகுதியை பெற்றது. அதன்படி, சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் குளிர்காலம் மற்றும் கோடைகாலங்களில் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு கண்ட மட்டத்தில் சர்வதேச இராணுவ விளையாட்டு போட்டிகளை நடத்துகிறது, இதுக்காகன அந்தந்த உறுப்பு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் / விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.