கடலாமை இறைச்சியுடன் 04 பேர் கடற்படையினரினால் கைது
கடற்படையினரினால் இன்று (2019 ஆக்டோபர் 07) நெடுந்தீவு, மனலடி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் 04 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன் படி, வடக்கு கடற்படை கட்டளை மூலம் நடத்திய தேடலின் போது நெடுந்தீவு, மனலடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடலாமை இறைச்சி 16.1 கிலோ கிராம் மீட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள், 24, 57, 60 மற்றும் 66 வயதுடையவர்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டது. அவர்கள் மற்றும் கடலாமை இறைச்சி சிலாவத்துர போலீசாரிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.
மேலும், சமீபத்தில் அழிந்து வரும் விலங்குகளின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்த கடலாமகள் பாதுகாக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் கருத்தான நீல மற்றும் பசுமைப் போரன் கிழ் கடற்படையினர் இந்த கடலாமைகளைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக தெற்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்கரைகள் கடலாமை முட்டை இடும் இடங்களாக அடையாளம் கண்டுள்ளது, அங்கு அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான ஆமைகளை கடலுக்குள் விடுவித்துள்ளனர். இதுபோன்ற விலங்குகளைப் பாதுகாப்பது அனைத்து இலங்கையர்களின் பொறுப்பாகும், நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.