வடமேற்கு கடற்கரையில் இருந்து 881 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டது
கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புத் துறை இனைந்து 2019 அக்டோபர் 6 ஆம் திகதி கற்பிட்டி, குடாவ கடல்களில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பீடி இலைகளுடன் இரண்டு (02) நபர்களை கைது செய்தன.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் இலங்கை கடலோர காவல்படையுடன் இணைக்கப்பட்ட ஒரு கப்பல் ஆகியவை இனைந்து கற்பிட்டி குடாவ கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 27 பொட்டலங்களில் இருந்த 881 கிலோகிராம் பிடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளன. சந்தேக நபர்கள் 37 மற்றும் 31 வயதுடைய கல்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களும் பிடி இலைகளும் கொழும்பு சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், கடற்படை மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக கடத்தல்காரர்களின் தனது நடவடிக்கைகளைத் தொடர முடியவில்லை மேலும் இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை கட்டுபடுத்த கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்கின்றது.
|