நேரடியாக சேர்துக்கொண்ட புதிய அதிகாரிகலுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படைக்கு நேரடியாக சேர்துக்கொண்ட 36 கடற்படை அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (அக்டோபர் 03) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் கொழும்பு இலங்கை கடற்படைக் கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் அட்மிரல் சோமதிலக திசானாயக்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகள் தன்னார்வ, பொறியாளர், கப்பல் கட்டுதல், தகவல் தொழில்நுட்பம், நிர்வாக, வழங்கள், பல் மருந்துவ மற்றும் இசைக்குழு துறைகளில் இருந்தனர்.
அங்கு உறையாடிய கடற்படைத் தளபதி, முதலில், கடற்படை அதிகாரிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் கடற்படைக்கு சேவை செய்வதும், கண்ணியமான முறையில் பணியாற்றுவதும் தங்கள் கடமையாக அமைந்தது என்றும். ஒரு தீவு தேசமாக, கடல் மற்றும் கடல் வளங்கள் மிக முக்கியமானவை என்றும் அவற்றைப் பாதுகாக்க ஒரு வலுவான கடற்படை இருக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் அவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கும் என்றும் கூறினார்.
மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்கள் செய்த தியாகங்கள் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்கு பங்களித்திருக்கின்றன என்றும் அவர் கூறினார். மேலும் இராணுவப் பயிற்சியைப் பெறுவது எளிதல்ல என்றும், உடல் வலிமையை விட மன வலிமை முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார். இறுதியாக அவர் தனது குழந்தைகளை தாய்நாட்டிற்கு ஒப்படைத்ததற்காக முழு கடற்படையின் பெற்றோருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைப் பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, புதிய அதிகாரிகளின் பெற்றோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.