இலங்கையைச் சுற்றியுள்ள அழகிய கடலோர பகுதியை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையின் பங்களிப்பு
இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் இரண்டு திட்டங்கள் 2019 அக்டோபர் 01 அன்று வடக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மூலம் கீரமலை மற்றும் தம்பகொல படுன இடைலான கரையோரப் பகுதி மற்றும் குரிகட்டுவான் கடற்கரை இவ்வாரு சுத்தம் செய்யப்பட்டது. இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகளால் பெரிதும் மாசுபட்ட கடற்கரைகளை கடற்படை பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாக அழகிய கடலோர பகுதியாக மாற்ற முடிந்ததுடன் இவ் வேலை திட்டங்களுக்காக பல கடற்படையினர்கள் கழந்து கொண்டனர்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களில் கீழ், இலங்கையைச் சுற்றியுள்ள கடலோர பகுதியை சுத்தம செய்யும் நடவடிக்கைகள் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் நடத்தப்படுகின்றதுடன் இது முலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.