முதல் பொப்பி மலர் கடற்படை தளபதிக்கு வழங்கப்பட்டது
இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் (ஓய்வு) தயா சந்தகிரி, முதல் பாப்பி மலரை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு இன்று (2019 அக்டோபர் 01) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இலங்கை கடற்படை சங்கத்தின் செயலாளர் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஷெமால் பெர்னாண்டோவும் கலந்து கொண்டார்.
முதல் உலகப் போரின் போது போர்க்களத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பொப்பி மலர் நினைவு நாள் உயிரை தியாகம் செய்த அனைத்து போர்வீரர்களையும் நினைவுகூரும் வகையில் தற்போது நடைபெறுகின்றது. இம் மலர்கள் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் தாய்நாட்டின் பாதுகாப்பிற்கான அவர்களின் உறுதிப்பாட்டை நினைவுகூரும் வகையில் போர்வீரர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.