இலங்கையைச் சுற்றியுள்ள அழகிய கடலோர பகுதியை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையின் பங்களிப்பு
இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று 2019 செப்டம்பர் 29 அன்று வடக்கு மற்றும் வட மேற்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மூலம் அலியாவலை கரையோரப் பகுதி, சில்லாய் மற்றும் சவுக்கடிக்கு இடையேயான கடற்கரை, பெருங்காடு கடற்கரையிலும், காங்கேசந்துரை துறைமுகத்திலும்,சேன்ட் கடற்கரை மற்றும் மண்டதீவு கடற்கரையும் இவ்வாரு தூய்மைப்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டது.
மேலும்,வடமேற்கு கடற்படை கட்டளை மூலம் முல்லிக்குலம் கடற்கரையில் இருந்து பூக்குளம் கடற்கரை வரை மற்றும் ஆலன்குடா மற்றும் நோரோச்சோலை இடையேயான கடற்கரையையும் இவ்வாரு சுத்தம் செய்யப்பட்டது.
இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகளால் பெரிதும் மாசுபட்ட கடற்கரைகளை கடற்படை பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாக அழகிய கடலோர பகுதியாக மாற்ற முடிந்ததுடன் இவ் வேலை திட்டங்களுக்காக பல கடற்படையினர்கள் கழந்து கொண்டனர்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களில் கீழ், இலங்கையைச் சுற்றியுள்ள கடலோர பகுதியை சுத்தம செய்யும் நடவடிக்கைகள் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் நடத்தப்படுகின்றதுடன் இது முலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
வடக்கு கடற்படை கட்டளையில் மேற்கொள்ளப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம்