கொழும்பு துறைமுக வாயில் மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகள் கைது செய்ய கடற்படை உதவி
கடற்படை மற்றும் துறைமுக பொலிஸார் ஒருங்கிணைந்து இன்று (செப்டம்பர் 26) மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது கொழும்பு துறைமுக வாயில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகள் கடற்படை உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, துறைமுக காவல்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர்கள் துறைமுக வாயில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த படகுகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளன,
மேலும், துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பாதைகளைத் தடுப்பது சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்து மற்றும் மீனவர்களுக்கு ஆபத்து என்று கடற்படையால் மீன்பிடி சமூகத்திற்கு எவ்வளவு எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் ஒரு சில பேர் அவ்வாறு செய்யவில்லை என்பதைக் காணலாம்.எனவே, அதை மீன்வள சமூகம் கவனித்துக் கொள்ள வேண்டும்.