சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு கடற்படை ஆதரவு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவின் அறிவுறுத்தல்களின் படி கடற்படைவீரர்கள் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களை மீட்க 24 நிவாரண குழுக்கள் மற்றும் 23 டிங்கி படகுகள் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
கடற்படை மரைன், துரிதமான இயங்கம் மிட்பு மற்றும் நிவாரனப் படை பிரிவு (4RU), சிறப்பு படகு படை மற்றும் கடற்படை நீர்முழ்கி பிரிவு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் மதுகம அவித்தாவ பகுதியில் உள்ள பாலத்தின் மீது கழிவுநீர் குவிந்து கிடப்பதால் வடிகால் தடைபட்டுள்ளதுடன் வடிகால் விரைவுபடுத்த கடற்படையின் நிவாரணக் குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், காலி மாவட்டத்தில் உள்ள வக்வெல்ல பாலம் கழிவுநீர் குவிந்து கிடப்பதால் அப் பகுதி நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. எனவே, வடிகால் விரைவுபடுத்த கடற்படை நிவாரண குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், கிட்டத்தட்ட ஆயிரம் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும், வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 93 இடம்பெயர்ந்தோரை மீட்கவும் கடற்படைக்கு முடிந்தது. மேலும், மோசமான வானிலை நிலவும் போதிலும் கடற்படை நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.