கடற்படை சோதனையால் 1616 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

கடற்படை 2019 செப்டம்பர் 20 ஆம் திகதி இரனைதீவில் மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது, பீடி இலை பொதியொன்று கண்டறிந்துள்ளது.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய சோதனையின்போது இரனைதீவு கரையில் வைத்து இருபத்து நான்கு (24)பொதிகள் மீட்கப்பட்டு அவற்றில் 1616 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் யாழ்ப்பாண சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், கடத்தல்காரர்கள் பிடி இலைகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்த முயன்றாலும் கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளினால் கடத்தலை நிறுத்த முடிந்தது.

இந்த ஆண்டுக்குள் மட்டுமே 34000 கிலோ பீடி இலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மேலும் தீவைச் சுற்றியுள்ள கடலில் இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து கடற்படை தொடர்ந்து தனது பணி மேற்கொள்கிறது.