சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்கள் கடற்படையால் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களை புல்மூடை கோகிலாய் பகுதியில் வைத்து கடற்படை 2019 செப்டம்பர் 20 அன்று கைது செய்தது.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம், புல்மூடை கோகிலாய் பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த மீவர்களை இவ்வாரு கைது செய்யப்பட்டன.
இந்த நபர்கள் 20, 34, 27 மற்றும் 30 வயதுடைய நீர்கொழும்பு, புத்தலம் மற்றும் கோகிலாய் பகுதிகளில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டது. கடற்படை ஒரு டிங்கி படகு, தடைசெய்யப்பட்ட ஒரு வலை, ஒரு வெளிப்புற எரிப்பு இயந்திரம் மற்றும் சில மீன்பிடி பொருட்களையும் கைப்பற்றியது.
டிங்கி படகு, வெளிப்புற எரிப்பு இயந்திரம், தடைசெய்யப்பட்ட வலை மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் குச்சவேலி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.