தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்துக்காக கடற்படை பங்களிப்பு

தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்துடன் இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இன்று (செப்டம்பர் 17) கொழும்பின் காலி முகத்திடம் கடற்கரையில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த பாராட்டுக்குரிய முயற்சியில் இணைந்த கடற்படை வீரர்கள், கடற்கரை பகுதியில் இருந்த பிளாஸ்டிக், பாலிதீன் மற்றும் பிற சீரழிவற்ற கழிவுகளை சேகரித்தனர்.

இதற்கிடையில், ‘தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரம்’ செப்டம்பர் 16 முதல் 21 வரை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் பலவிதமான கடற்கரை சுத்தம் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், கடலோர மற்றும் கடல் வளங்களை எதிர்கால தலைமுறையினருக்காக பாதுகாக்கும் முயற்சியில் கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது.


தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்துக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் பங்களிப்பு


தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்துக்காகமேறகு கடற்படை கட்டளையின் பங்களிப்பு


தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்துக்காக வட மத்திய கடற்படை கட்டளையின் பங்களிப்பு


தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்துக்காகதெற்கு கடற்படை கட்டளையின் பங்களிப்பு