சந்தேகத்திற்கிடமான 04 மீன்பிடிக் கப்பல்களை கடலில் வைத்து கடற்படை கைப்பற்றியது
இலங்கையின் தனித்துவமான பொருளாதார மண்டலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை கப்பலொன்று மூலம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 'தனுஜி', 'சுப பெதும் 4', 'லக்பிரிய தேஹி' மற்றும் 'நலின் 10' என பெயரிடப்பட்ட பல நாள் மீன்பிடிக் படகுகள் மாலத்தீவு கடலில் மீன்பிடிப்பதை கண்கானிக்கப்பட்டது.
அதன்படி, கடற்படை அந்த மீன்பிடிக் கப்பல்களை மற்றும் அங்கு இருந்த 27 நபர்கள் கைது செய்து இன்று (2019 செப்டம்பர் 16) மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுக்கு அழைத்துச் சென்றது. அங்கு மேலதிக தேடலின் போது, ஒரு மீன்பிடிக் கப்பலில் சிறிய அளவிலான போதை மருந்துகளை (ஐஸ்) மற்றும் சுறா துடுப்புகள் கடற்படை கண்டுபிடித்துள்ளது.
இந்த கப்பல்களுக்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு இருக்கின்றதா என்று தற்போது விசாரணை நடந்து வருகிறதுடன் கப்பல்கள் கைப்பற்றிய போது காணப்பட்ட மீன் தொடர்பாக மீன்வளத் துறை நடவடிக்கை மேற்கொள்கின்றது.
|