கேரள கஞ்சா வைத்திருந்ததற்காக இரண்டு (02) சந்தேக நபர்களை கைது செய்ய கடற்படை உதவி
கடற்படை , காவல்துறையினருடன் இணைந்து வலஸ்முல்ல, மாதர மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் செப்டம்பர் 07, 2019 அன்று சோதனைகளை மேற்கொண்டதுடன், கேரள கஞ்சா வைத்திருந்த 02 சந்தேக நபர்களை கைதுசெய்தனர்.
அதன்படி தெற்கு கடற்படை கட்டளை பட்டிபோல அதிரடிப்படையினரின் உதவியுடன் போவலையில் நடத்திய சோதனையின் போது 1.05 கிலோ கேர கஞ்சா ஒரு நபரின் வசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் சந்தேக நபர் அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரன் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 30 வயதான வலஸ்முல் பகுதியில் வசிப்பவர் என அடையாலம் காணப்பட்டது.
இதற்கிடையில், மன்னார் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, மன்னாரில் உள்ள பிரிவு துணைக்குழுவுடன் ஒருங்கிணைந்து வட மத்திய கடற்படை கட்டளை, 75 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்தது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எப்பாவலவில் வசிக்கும் 35 வயதுடையவர் என அடையாலம் காணப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் முறையே வலஸ்முல்ல மற்றும் மன்னார் காவல் நிலையங்கள் ஒப்படைக்கப்பட்டன. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், இதுபோன்ற பொருட்களை வைத்திருப்பவர்களுக்கும் கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.