தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 12 நபர்களை கடற்படையால் கைது
வனாதவில்லுவ கல்லடிய குளம் பகுதியில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேரை 2019 செப்டம்பர் 02 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.
அதன் படி, வடமேற்கு கடற்படை கட்டளை மூலம் கல்லடிய பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மூலம் மீன்பிடித்த இந்த 12 சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் 20 முதல் 38 வயது வரையிலான கல்பிட்டி மற்றும் பல்லியவாசலபாடு ஆகிய பகிதிகளில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டன. அங்கு சந்தேக நபர்களுடன் 07 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மற்றும் 07 டிங்கிகளும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன. சந்தேக நபர்கள், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மற்றும் டிங்கி படகுகள் புத்தலம் மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுபோன்ற தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தின் மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.