கடற்படை சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்று காலி முகத்திடலில் நடத்தியது
சர்வதேச தூய்மை தினத்தை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 02) காலி முகத்திடலில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றை கடற்படை தொடங்கியுள்ளது.
அதன் படி மேற்கு கடற்படை கட்டளை மூலம் 2019 செப்டம்பர் 02 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு காலி முகத்திடம் கடற்கரை மையமாக இந்த சுத்தப்படுத்தல் திட்டம் தொடங்கியது.
தொடக்க நாளான இன்று மேற்கு கடற்படை கட்டளையின் உறுப்பினரினால் கடற்கரையிலிருந்து பெரும்பாலான கழிவுகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டம் காலி முகத்திடம் கடற்கரை மையமாக கொண்டு மேலும் ஆறு நாட்கள் செயல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக கொழும்புக்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் இதயத்தை வென்ற காலி முகத்திடம் கடற்கறை ஒரு சுத்தமான, அழகான கடற்கரையாக பராமரிக்க கடற்படை விரும்புகிறது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின், 'நீல ஹரித' சுற்றுச்சூழல் கருத்தாக்கத்தின் கீழ், அனைத்து கட்டளைகளிலும் பல சூழல் நட்பு திட்டங்கள் கடற்படையால் வெண்மையாக்கப்படுகின்றன.
|