பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை மீட்க இலங்கை கடற்படை உதவியது
யாழ்ப்பாணம் கச்சதீவு அருகிழுள்ள கடலில் கடினத்தன்மையால் துயரமடைந்த இந்திய படகொன்று மற்றும் படகில் இருந்த நான்கு மீனவர்களை இன்று (செப்டம்பர் 01) காலை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ரோந்துப் பணியில் ஒரு கடற்படை கப்பல் குழுவினரால் கடலில் துன்பகரமான படகை கண்காணிக்கப்பட்டதுடன் உடனடி தொழில்நுட்ப ஆதரவை வழங்க அவர்கள் முன்வந்துள்ளனர். மேலும் கடல் கரடுமுரடான காரனத்தினால் சோர்வடைந்த மீனவர்களுக்கு உணவு மற்றும் பானங்களும் கடற்படை மூலம் வழங்கப்பட்டது.
இவ்வாரு பாதிக்கப்பட்ட படகில் இருந்த நான்கு மீனவர்களும் 37 முதல் 60 வயது வரையிலான இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், இலங்கை கடலில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கும் மீன்பிடி சமூகத்திற்கும் நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
|