கடற்படை மூலம் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி
பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் இலங்கை கடலோர காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கான கப்பல்களுக்கான அணுகல் மற்றும் பறிமுதல் (Visit Board Search and Seizure - VBSS) பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா, 2019 ஆகஸ்ட் 30 அன்று திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் தலைமை அதிதியாக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். அதன்படி, பங்களாதேஷின் 08 கடற்படை வீரர்கள், மாலத்தீவின் 07 கடற்படை வீரர்கள், இலங்கை கடலோர காவல்படையின் ஒரு அதிகாரி மற்றும் இலங்கை கடற்படையின் 07 மாலுமிகள் கழந்துகொன்டார்.
கடற்படை ஆலோசகர்களினால் திருகோணமலை சிறப்பு கடற்படை படைத் தலைமையகத்தில் இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட இந்த பாடநெறியில் முக்கியமாக போதைப்பொருள் அடையாளம் காணல், போதைப்பொருள் பரிமாற்ற முறைகள் மற்றும் திட்டமிடல், தயாரிப்பு மற்றும் போர்டிங் நடைமுறைகள் குறித்து அறிவை வளங்கப்பட்டது.
நிறைவு விழாவுக்குப் பிறகு, கடலில் கடல்சார் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை எவ்வாறு செய்வது என்பதை நிரூபிக்க பயிற்சி பெற்ற அதிகாரிகளால் ஒரு திறமை நிகழ்ச்சியும் வழங்கப்பட்டது. கிழக்கு கடற்படை கட்டளையின் மூத்த கடற்படை அதிகாரிகள், ஜப்பான் கடலோர காவல்படையின் கடல் சட்ட அமலாக்க ஆலோசகர்கள், ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத் திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அதிகாரிகள் மற்றும் சிறப்பு படகு படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.