04 மீனவர்களுடன் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகு கடற்படை கைப்பற்றியது

புல்முடை கடல் பகுதி அருகில் இருந்து இன்று (2019 ஆகஸ்ட் 29) 04 மீனவர்களுடன் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் படகொன்றை கடற்படை கைப்பற்றியது.

அதன்படி, புல்முடை கடல் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படை கப்பல் மூலம் மீன்பிடிப் படகுகளை சோதிக்கும் போது சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகொன்று (டிங்கி) காணப்பட்டது. சந்தேகத்திற்கிடமான டிங்கியைத் சோதிக்க முயற்சிக்கும் போது, கடற்படையின் கட்டளைக்கு இணங்காமல் சோதனையில் இருந்து தப்பிக்க முயன்றது. அங்கு, கடற்படை மேற்கொன்டுள்ள எச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டு மூலம் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பலை நிறுத்த முடிந்தது.

பின்னர் படகில் மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது அங்கு செல்லுபடியாகும் ஆவணம் செல்லுபடியாகும் மீன்பிடி உரிமம் பத்திரிக்கைகள், மீன்பிடி பொருட்கள் அல்லது அவர்களின் அடையாளத்தை நிரூபிக்கக்கூடிய வேறு எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், சந்தேக நபர்களின் வசம் உள்ள 50.000 மதிப்புள்ள இலங்கை ரூபாயையும் கடற்படை கண்டுபிடித்துள்ளது. அதன்படி, 04 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்து அவர்களது மீன்பிடிக் படகும் கைப்பற்றியது. சந்தேக நபர்கள் 19, 20, 25 மற்றும் 48 வயதுடையவர்கள் என அடையாலம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது படகு குச்சவேலி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், மீன்வளச் சட்டத்தின் மூலம் கடற்படைக்கு வழங்கப்பட்ட சரியான சட்ட விதிகளுக்கு இணங்க, இலங்கை கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீன்பிடிக் கப்பல்களை கடற்படை தொடர்ந்து சோதிக்கின்றதுடன், மேலும் கடலில் நடத்தப்படுகின்ற இத்தகைய தேடல்களின் விளைவாக பல சட்டவிரோத செயல்களை வெற்றிகரமாக கடற்படை தடுத்துள்ளது.