தீவைச் சுற்றியுள்ள அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாக்க கடற்படைத் பங்களிப்பு
நாடு முழுவதும் உள்ள அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதற்கான கடற்படையின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு கடற்கரை ச்த்திகருப்பு திட்டம் 2019 ஆகஸ்ட் 25 அன்று வட மத்திய கடற்படை கட்டளையில் நடைபெற்றது.
அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்துடன் இணைந்தது. நரவிலகுளகுளம் பகுதியில் 1250 சதுப்புநில மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான திட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.
மேலும், மன்னார் தால்பாடு கடற்கரை பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் பங்கேற்புடன் துப்புரவு திட்டமொன்று நடத்தப்பட்டது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் நீல ஹரித சங்கிரமய தொலைநோக்கு கருத்தாக்கத்தின் படி கடற்படை ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் இதேபோன்ற கடலோர பாதுகாப்பு திட்டங்களை நடத்தி வருகிறது.