அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு
தீவைச் சுற்றியுள்ள ஒரு அழகிய கடலோரப் பாதையை, கடற்படையின் பாதுகாப்பு முயற்சியின் கட்டமாக, மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் திகதி வடக்கு கடற்படை கட்டளயை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அதன்படி, குருநகர் கடற்கரை பகுதியை சுத்தம் செய்வதற்காக வடக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் கபிலா சமரவீரவின் உத்தரவின் பேரில் வடக்கு கடற்படை கட்டளை யாழ்ப்பாண பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த துப்புரவு பிரச்சாரம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் அதிகாரிகள், இளவலை கல்லூரி மாணவர்கள், கஜபா ரெஜிமென்ட்டின் அதிகாரிகள் / வீரர்கள் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைந்த கடற்படை வீரர்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதனடிப்படையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் பசுமை நீல கருத்தின் கீழ் ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் கடற்படை வீரர்கள் பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை நடத்துகின்றனர்.
|