இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் நந்திமித்ர ஆகிய கப்பல்கள் ஒரு சுற்றுப்பயணத்திற்காக பங்களாதேஷ் சிட்டகாங் மற்றும் மியான்மாரின் ரங்கூன் துறைமுகங்களுக்கு பயணம் செய்தது.
இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சாயுர மற்றும் இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ர ஆகிய கப்பல்கள் 2019 ஆகஸ்ட் 22 அன்று பயிற்ச்சி பெரும் அதிகாரிகளின் ஒரு பயிற்சி அமர்வில் பங்கேற்க பங்களாதேஷின் சிட்டகாங் மற்றும் மியான்மரின் ரங்கூன் துறைமுகங்களை நோக்கி பயணம் செய்தது.
கேப்டன் (ஏ.எஸ்.டபிள்யூ) நிலந்த ஹேவாவிதரனா இலங்கை கடற்படை கப்பல் சயுரவின் கட்டளை அதிகாரியாகவும், கேப்டன் (சி) புத்திக லியனகமகே இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ரவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றப்பட்டனர்.
அதன்படி, கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை விட்டு வெளியேறி ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 29 வரை பங்களாதேஷில் தங்கியிருந்து பின்னர் செப்டம்பர் 01 முதல் 04 வரை மியான்மரில் இருக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், கப்பல்களின் படையினர் அந்த நாடுகளின் கடற்படையுடன் பல பயிற்சி அமர்வுகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை கப்பல் சயுர, மற்றும் இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ர ஆகியவை செப்டம்பர் 4 ஆம் திகதி மியான்மாரின் ரங்கூன் துறைமுகத்தை விட்டு வெளியேறி செப்டம்பர் 4 ஆம் திகதி இலங்கைக்கு திரும்பவுள்ளன.
;
|