பி 625 கப்பல் இலங்கை கடற்படை கப்பல் “பராக்ரமபாஹு” எனப் பெயரில் அதிகாரம் அளிப்பு
இலங்கை கடற்படையின் செயற்பாட்டு நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கத்தில் சீன மக்கள் குடியரசில் இருந்து இலங்கை கடற்படைக்கு பெறப்பட்டுள்ள பி 625 கப்பல் உத்தியோகபூர்வமாக இலங்கை கடற்படை கப்பல் “பராக்ரமபாஹு” என்ற பெயரில் அதிகாரமளிப்பு விழா இன்று (ஆகஸ்ட் 22) அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவருடைய தலமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்காக மதிப்பிற்குரிய துறவிகள் உட்பட மத குருக்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரால் (ஓய்வு) ஷாந்த கோட்டேகொட உட்பட அமைச்சு செயலாளர்கள், இலங்கையில் அமெரிக்க தூதர் திருமதி எலீனா டெப்லிஸ், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் ஆகியோரும் இன் நிகழ்வுக்காக கலந்து கொண்டனர்.
மேலும், கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள், ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல, ஆகியோர் உட்பட பலரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கழந்துகொன்ட அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் புதிய கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் நலிந்த ஜயசிங்கவுக்கு கப்பலுக்கான அதிகார பத்திரம் வழங்கப்பட்டது. அவ்வேளை கப்பலின் கட்டளை அதிகாரி குறித்த பத்திரத்தை வாசித்தவுடன் பெயர்பலகை திரைநீக்கம் இடம்பெற்றது. அதன் பின் ஜனாதிபதி மற்றும் அதிதிகள் இக் கப்பலை சுற்றிப்பார்வையிட்டனர்.
இக் கப்பல் கடந்த ஜூனி மாதம் 05 ஆம் திகதி சீன ஷேங்ஹாயில் வைத்து அதிகாரப்பூர்வமாக இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1994 அம் ஆன்டில் தயாரிக்கப்பட்ட இக் கப்பல் 112 மீட்டர் நீளம் மற்றும் 12.4 மீட்டர் அகலம் கொன்டுள்ளது. சுமார் 2300 தொன் கொள்திறன் கொண்ட இக் கப்பலில் 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 110 கடற்படை சிப்பாய்கள் ஒரேநேரத்தில் தங்குவதற்கான விசாலமான விடுதி மற்றும் பிற வசதிகளையும் கொண்டு காணப்படுகின்றது.
குறித்த கப்பல் புதிய தொழில் நுட்ப ஆயுதங்கள், தொடர்பு சாதனங்கள் மற்றும் பல இயக்க முறைமைகள் கொன்ட கப்பலாகும். இலங்கை கடல் எல்லைக் குழ் ரோந்து பணிகள், தேடுதல் நடவடிக்கைகள், மனிதாபிமான நிவாரண மற்றும் பேரழிவு பதில் நடவடிக்கைகள் மற்றும் கடல் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றக நடவடிக்கைகளுக்காக இக்க்கப்பல் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
|