1.460 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரினால் கண்டுபிடிப்பு
கடற்படை மற்றும் முல்லைதீவு போலீஸ் சிறப்பு படையணி இனைந்து இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலையில் முல்லைதீவு உப்புக்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 1.460 கிலோ கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் படி கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் முல்லைதீவு உப்புக்குளம் போலீஸ் சிறப்பு படையணி இணைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை கண்கானிக்கப்பட்டதுடன் மேலும், வாகனத்தின் உள்ளே இருந்த ஒரு பார்சலை சோதிக்கும் போது குறித்த கேரளா கஞ்சா பொதி கண்டு பிடிக்கப்பட்டன.
கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு படையணி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் காரணமாக கடத்தல்காரர்கள் கேரளா கஞ்சா பொதியை கைவிட்டு தப்பி சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மேலதிக விசாரணைக்காக முல்லைதீவு போலீஸ் சிறப்பு படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது.