பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு கடற்படை அதிகாரிகளுக்கு கடற்படையினரினால் சிறப்பு பயிற்சி
போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் பரிந்துரையின் படி (United Nations Office on Drugs and Crime - UNODC) பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் இலங்கையில் உள்ள கடலோர காவல்படை அதிகாரிகளுக்கான கப்பல்கள் மற்றும் படகுகள் தேடல் மற்றும் கைப்பற்றலைப் பற்றிய பாடநெறி வி.பி.எஸ்.எஸ் 2019 ஆகஸ்ட் 19 அன்று திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பாடநெறி நடத்தப்படும். இத் தொடக்க உரையை கொமான்டர் தர்மசிறி ஹெரத் வழங்கினார். இன் நிகழ்வில் சிறப்பு படகு படை பயிற்சி பாடசாலையின் அதிகாரி மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் கடல் சட்ட ஆலோசகர்கள் கலந்து கொண்டன.
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றத் திட்டத்தின் ஒருங்கிணைப்புடன் இலங்கை கடற்படை நான்காவது முறையாக ஏற்பாடு செய்துள்ள இரண்டு வார கால பாடத்திட்டத்தில், மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 20 கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் கலந்து கொள்கின்றனர். அதன்படி, பங்களாதேஷின் 08 கடற்படை வீரர்கள், மாலத்தீவின் 07 கடற்படை வீரர்கள் மற்றும் 01 கடலோர காவல்படை அதிகாரி மற்றும் இலங்கை. கடற்படையின் 07 மாலுமிகள் கழந்துக்கொள்கிரார்கள். 4 வது வி.பி.எஸ்.எஸ். பாடத்திட்டத்தின் போது, பங்கேற்பாளர்கள் முக்கியமாக போதைப்பொருள் அடையாளம் காணல், போதைப்பொருள் பரிமாற்ற முறைகள் மற்றும் திட்டமிடல், தயாரிப்பு மற்றும் படகு நடைமுறைகள் குறித்து தங்கள் அறிவை வளர்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல், குற்றம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து உலகளாவிய சமூகத்தைப் பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் முதன்மைப் பங்கைக் கொண்டுள்ளது, மேலும் அதன் உறுப்பு நாடுகளுக்கு சட்டவிரோத போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தல், கடல்சார் குற்றம், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத மனித கடத்தல் ஆகியவற்றை வழங்குகிறது. அதன் கட்டுப்பாட்டுக்கு பங்களிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வி.பி.எஸ்.எஸ் பயிற்சி திட்டம் 2019 ஆகஸ்ட் 30 அன்று முடிவடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.