வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடித்த மீன் பொதி மற்றும் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது
கடற்படையினரினால் திருகோனமலை, வத்தம மற்றும் கோகிலாய், துடுவ பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த மீன் பொதி மற்றும் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 08 பேர் கைது செய்யப்பட்டது.
அதன் படி 2019 ஆகஸ்ட் 19 ஆம் திகதி திருகோனமலை, வத்தம பகுதியில் மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த 446 கிலோ கிராம் மீன், இரண்டு படகுகள் மற்றும் மீன்பிடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மீன் பொதி, டிங்கி படகு மற்றும் மீன்பிடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முத்தூர் உதவி மீன்வளத்துறை இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும் கோகிலாய், துடுவ பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீனபிடியில் ஈடுபட்ட 08 பேர், ஏலு டிங்கி படகுகள் மற்றும் மீன்பிடி பொருட்கள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பத்தலம்,கோகிலாய், புல்முட்டை மற்றும் மதுரன்குழிய பகுதிகளில் வசிக்கின்ற 24 முதல் 43 வயதுடைய என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள், டிங்கி படகு மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேலி மீன்வளத்துறை இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன