சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற மூவர் கடற்படையினரினால் கைது
கடற்படையினர் இன்று (ஆகஸ்ட் 20) கற்பிட்டி, குடாவ பகுதியில் வைத்து சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற மூவரை கைது செய்துள்ளனர்.
அதன் படி வட மேற்கு கடற்படை கட்டளை மூலம் கற்பிட்டி, குடாவ பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற இந்த நபர்களை கைது செய்துள்ளனர். அங்கு, 01 லொரி மற்றும் 02 மணல் கியுப்கள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள், லொரி மற்றும் மணல் பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத மணல் சுரங்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்க சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகளை நாடுகிறது, இதனால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தேசிய கொள்கைக்கு கடற்படை பங்களிக்கிறது.