பதினாறு (16) அங்கீகரிக்கப்படாத குடியேறியவர்கள் கடற்படையினரினால் கைது
2019 ஆகஸ்ட் 19, அன்று, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 16 இலங்கையர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு வென்னப்புவ பகுதியில் ஒரு சந்தேகமான வீட்டொன்று சோதித்துள்ளது. அங்கு மேற்கொன்டுள்ள மேலதிக சோதனை நடவடிக்கையின் போது அங்கு வெளிநாடு செல்லத் தயாராகி இருந்த பதினான்கு நபர்கள், வீட்டு உரிமையாளர் மற்றும் கடத்தல்கார்ர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களுடன் இருந்த கடத்தல்காரர் இதற்கு முன்னரும் ஆஸ்திரேலியாவுக்கு அங்கீகரிக்கப்படாத குடியேறியவர்கள் கடத்திய நபராக கண்டு பிடிக்கப்பட்டது. சந்தேகநபர்கள் குருநேகல, சிலாபம், புத்தலம் மற்றும் நீர் கொழும்பு பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் வீட்டைச் சோதிக்கும் போது, ஒரு சிறிய லாரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கண்டறிந்தனர். . கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு குழந்தைகள் (2), ஒரு பெண் (1) மற்றும் பதின்மூன்று ஆண்கள் (13) ஆகியோர் அடங்குவர். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் வெண்ணாப்புவ போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவ்வாரு கடற்படை மூலம் நடத்திய பரிசோதனையின் விளைவாக 2019 ஆகஸ்ட் 17, அன்று, (12) அங்கீகரிக்கப்படாத புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டனர். மேலதிக தேடலின் விளைவாக, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் கடத்தல்காரர்களின் எண்ணிக்கையை குறைக்க கடற்படைக்கு முடிந்தது.