காலி கடலில் கைது செய்யப்பட்ட பல நாள் மீன்பிடி படகிலுருந்து மேலும் போதைப்பொருற்கள் கடற்படையினரினால் கண்டுபிடிப்பு
இலங்கையின் தெற்கு கடற்கரையில் வைத்து ஜூலை 11 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 ஈரானியர்கள் மற்றும் அவர்களின் படகு மேலும் சோதிக்கும் போது 70 கிலோ கிராம் ஹெராயின் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதே சமயம், நான்கு இலங்கையர்களுடன் அவர்களது பல நாள் மீன்பிடிக் படகொன்று ஜூலை 10 ஆம் திகதி காலி கடலில் இருந்து கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன் அங்குருந்து ஹெராயின் மற்றும் ஹஷீஷ் போன்ற போதைப் பொருற்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவங்களுக்கிடையில் தொடர்பு இருப்பதாக கடற்படை சந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பாக போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவின் பேரில் கடற்படையால் கைப்பற்றப்பட்ட உள்ளூர் பல நாள் படகை பரிசோதித்தபோது, சந்தேகநபர்கள் படகில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட ஹெராயின் இருப்தை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருந்து கடற்படை கிட்டத்தட்ட 85 கிலோ கிராம் போதை பொருட்கள் இன்று கண்டுபிடித்தது.
இந்த சம்பவம் குறித்து கடற்படை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்படுவார்.