போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை உதவி
கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் ஒருங்கிணைந்து 2019 ஆகஸ்ட் 17 அன்று கற்பிட்டி மாம்பூரி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது.கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்யப்பட்டது.
அதன்படி, கற்பிட்டி, மாம்பூரி பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் புத்தலம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் நடத்திய கூட்டு சோதனையின் போது சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கலிள் சென்ற ஒருவரை கண்காணித்து அவரை மேலும் சோதிக்கும் போது 250 கிராம் கேரள கஞ்சாவை அவர் வைத்திருந்தார். இதையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் கேரள கஞ்சாவை கடத்திச் சென்றிருந்தபோது இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் நோரோச்சோலையில் வசிக்கும் 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர், மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சா ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக நோரோச்சோலாய் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த சில நாட்களில் கடற்படை நடத்திய சோதனைகளின் விளைவாக, ஏராளமான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தீவில் இருந்து இந்த அச்சுறுத்தலை ஒழிக்கும் முயற்சியில் கடற்படை தொடர்ந்து மேற்கொள்கின்றது